Diploma in Fine Arts (D.F.A.) -- [ஓவிய நுண்கலைப் பயிற்சி்]

இதுவரை சொன்ன மூன்று பயிற்சியும், மூன்று விதமானவை. முதல் பயிற்சியாகிய ஓவிய ஆசிரியர் பயிற்சி குறிப்பிட்ட கல்வித் தகுதி உடையோர் மட்டும் அரசு வேலைக்குச் செல்வதற்காக அரசாங்க ஓவியத் தேர்வு எழுதும் பயிற்சியாகும். இரண்டாவது பயிற்சியாகிய கமர்ஷியல் ஆர்ட் பயிற்சி, படிப்பே இல்லாதவர்களும், பயன் பெறக்கூடிய வகையில் சொந்தமாக, ஓவியத் தொழில் நடத்துவதற்கு வழிகாட்டும் ஒரு சிறந்த பயிற்சியாகும். மூன்றாவது பயிற்சியாகிய பத்திரிகை ஓவியப் பயிற்சி ஒரு குறிப்பிட்ட துறையில் தங்கள் திறமையை வெளிப்படுத்தி பணமும், புகழும் பெறச் செய்யும் ஒரு உன்னதமான பயிற்சியாகும். இந்த ஓவிய நுண்கலைப் பயிற்சி எல்லோருக்கும் ஏற்ற இனிய பயிற்சியாகும். இப்பிரிவில் வரையும் ஆர்வமுள்ள யார் வேண்டுமானாலும் சேரலாம். காலத்தைப் பொன்னாக்கும், மனதிற்கு மகிழ்ச்சியளிக்கும் கலைத்தவமே இப்பயிற்சியாகும்.

இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், குடும்பத் தலைவிகள், டாக்டர்கள், என்ஜினியர்கள், வழக்கறிஞர்கள் என்று எல்லோரும் சேர்ந்து பயிலலாம். பயில்கின்றனர். ஓவியக் கலையை கற்பது, தியானம் செய்வதற்கு ஒப்பாகும். மனம் அமைதி பெறும். ஒரு சிறிய படத்தை வரைந்து முடித்ததும் ஏற்படுகின்ற மனநிறைவை கோடி பொருள் கொடுத்தாலும் விலை கொடுத்து வாங்க முடியாது.

இது ஒரு தவம். ஒப்பற்ற உயரிய கலை. தங்கள் நேரத்தை பயனுள்ளதாக செலவிட விரும்பும் அனைவரும் இப்பயிற்சியில் சேரலாம். கோடுகள் போடுவதிலிருந்து, பென்சில் சீவுவது எப்படி? என்பது முதல் தொடங்கி இன்றைய நவீன கலைப் படைப்பாகிய மாடர்ன் ஆர்ட் ஓவியங்கள் வரைவது தஞ்சாவூர் ஓவியங்கள் வரைவது வரை மிகத் தெளிவாக படிப்படியாக வரையும் முறையில் எளிதாக புரியும் வகையில் பாடங்கள் சுலபமாக சொல்லப்பட்டிருக்கின்றன. இந்தப் பயிற்சி ஓவியக் கலையின் அடிப்படையிலிருந்து தொடங்கி ஓவியம் வரையும் முறைகள கற்றுத் தருகிறது. வாட்டர் கலர், ஆயில் கலர், அக்ரிலிக் கலர், பேப்ரிக் கலர், டெம்பரா கலர், பேஸ்டல்கள், கிரேயான்கள் ஆகிய வண்ணங்களில் வரையும் முறைகளும். இயற்கை காட்சிகள், உருவப்படங்கள், மனிதர்கள், விலங்குகள், பறவைகள், பலவிதமான பொருட்கள் இவைகள வரைதல் Still Life, Traditional, Modern Art, Portrait Painting போன்ற நுண்கலைகளும் விரிவான பாடங்களாடு உள்ளன. இந்தப் பிரிவு உங்களிடம் பொதிந்து மறைந்து கிடக்கும் திறமையை வெளிப்படுத்தி உங்கள முழு ஓவியராக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

இதுவரை ஓவியங்கள பார்த்து ரசிப்பவராக இருந்த நீங்கள் இனிமேல் ஓவியங்கள வரையும் ஓவியராகலாம். இப்பயிற்சியினால் உங்களுக்கு கிடைக்கும் தன்னம்பிக்கை உங்கள் சொந்த வாழ்க்கையிலும் உங்கள ஒரு உன்னதமான நிலைக்கு உயர்த்தும். இதுதான் உண்மை.

பயிற்சிக்காலம் மற்றும் பயிற்சிக் கட்டணம்

இந்தப் பயிற்சிக்கான காலம் ஆறு மாதங்கள். இதற்கான கட்டணம் ரூ. 4000/ ஆகும். மொத்தமாக செலுத்த விரும்பினால் ரூ. 3000/ செலுத்தினால் போதும். அல்லது மூன்று தவணைகளில் ரூ.1500/ + ரு. 1250/ + ரூ.1250/ என்றும் செலுத்தலாம்.

 

 

More Details